வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profileg
வைரமுத்து

@Vairamuthu

கவிஞர் - பாடலாசிரியர்

ID:347861221

linkhttp://vairamuthu.in/ calendar_today03-08-2011 13:49:56

1,8K Tweets

516,2K Followers

0 Following

வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

என் மதிப்புக்குரிய
அமைச்சர் ஒருவரின்
மனைவியிடம் கேட்டேன்

‘பெண் பிள்ளைகளுக்கு
எப்பொழுதம்மா திருமணம்?’

அவர் முகத்தில் - ஒரு
வாடிய புன்னைகை
ஓடி உடைந்தது

‘சமகாலத்தில்
திருமணமான சகபெண்களின்
வாழ்க்கையைப்
பார்த்துப் பார்த்துத்
திருமணம் என்றதும்
அஞ்சுகிறார்கள் அண்ணா’
என்றார்

இந்தக்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

இயக்குநர் சந்தோஷ்
ஒரு சிறந்த ஓவியர்

‘மிகச் சிறந்த’ என்ற
அடைமொழியும் மிகையன்று

தயாரிப்பாளர்
விவேகானந்தனோடு
கதைசொல்ல வந்தவர்
தான் வரைந்த
என் ஓவியத்தைப்
பரிசளித்தார்

கவிஞனுக்கு
ஓவியனின் காணிக்கை

ஓவியமும் கவிதையும்
வெவ்வேறா என்ன?

கோடுகளால் வரைந்த கவிதை
ஓவியம்
எழுத்துக்களால்

இயக்குநர் சந்தோஷ் ஒரு சிறந்த ஓவியர் ‘மிகச் சிறந்த’ என்ற அடைமொழியும் மிகையன்று தயாரிப்பாளர் விவேகானந்தனோடு கதைசொல்ல வந்தவர் தான் வரைந்த என் ஓவியத்தைப் பரிசளித்தார் கவிஞனுக்கு ஓவியனின் காணிக்கை ஓவியமும் கவிதையும் வெவ்வேறா என்ன? கோடுகளால் வரைந்த கவிதை ஓவியம் எழுத்துக்களால்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

கலைஞர் நூற்றாண்டு
நிறைவு விழாக் கவியரங்கத்துக்கு
அழைப்பிதழ் தர வந்தார்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சரவையில்
இவர் ஓர் உறங்காப்புலி

மக்கள் பணிநோக்கி
ஓட்டமும் நடையுமாய்
ஓடிக்கொண்டே இருப்பவர்

நடைப்பயிற்சி இவரால்
நகரமெங்கும்
உற்சாகம் பெற்றது

அதை வரவேற்று
நான் ஒரு
வாசகம்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாக் கவியரங்கத்துக்கு அழைப்பிதழ் தர வந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சரவையில் இவர் ஓர் உறங்காப்புலி மக்கள் பணிநோக்கி ஓட்டமும் நடையுமாய் ஓடிக்கொண்டே இருப்பவர் நடைப்பயிற்சி இவரால் நகரமெங்கும் உற்சாகம் பெற்றது அதை வரவேற்று நான் ஒரு வாசகம்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

எங்கிருந்தோ
எனக்கொரு பாடல் வந்தது
வியந்தும் மகிழ்ந்தும் போனேன்

அலிபாபாவும்
40 திருடர்களும் படத்தில்
எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடித்த
புகழ்பெற்ற பாடல் காட்சியோடு
நான் எழுதிய பாடல் ஒன்றைப்
பொருத்தியிருக்கிறார்கள்

எம்.ஜி.ஆருக்குப்
பாடல் எழுதவில்லையே
என்ற கலைக்குறை

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

‘எல்லா இடங்களிலும்
தான் இயங்கவியலாது என்றுதான்
கடவுள் தாய்மார்களைப்
படைத்தான்’ என்ற பொன்மொழி
நாத்திகர்களும் முற்றிலும்
புறந்தள்ள முடியாதது

உலகெங்கும்
தாயர் வெவ்வேறு;
தாய்மை ஒன்றுதான்

அது
வாஷிங்டன் ஆனாலென்ன?
வடுகபட்டி ஆனாலென்ன?

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

கலைஞருக்கும்,
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்துசேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்

எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது

சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்

‘வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’

‘ஏன்? எதனால?’

‘அவரு

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

வங்கக் கடல்போல் நிகழ்ந்த
வணிகர் சங்கங்களின்
பேரமைப்பு மாநாட்டில்
ஒரு பெருங்கோரிக்கை வைத்தேன்

'தமிழ்நாட்டின்
அனைத்து வணிக நிறுவனங்களின்
பெயர்ப் பலகைகளும்
தமிழில் விளங்கவேண்டும்' என்றேன்

நான் பேசிமுடித்த மறுகணமே
'அப்படியே செய்து முடிப்போம்'
என்று அறிவித்தார்
மாநிலத் தலைவர்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

மதுரையில்
வணிகர் சங்கங்களின்
பேரமைப்பு மாநாட்டில்
உரையாற்றினேன்

'கொரோனா காலத்தில்
வீடுதேடி வந்து
உணவுப்பொருள் தந்து
உயிர்காத்த உத்தமர்கள்
வணிகர்கள் என்றேன்

அவர்கள் தந்த பொருளால்
தயாரிக்கப்பட்ட ரசம்
நமக்கெல்லாம் மருந்தானது என்றேன்

சீரகம் மிளகு பூண்டு தக்காளி மிளகாய் புளி கடுகு

மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் உரையாற்றினேன் 'கொரோனா காலத்தில் வீடுதேடி வந்து உணவுப்பொருள் தந்து உயிர்காத்த உத்தமர்கள் வணிகர்கள் என்றேன் அவர்கள் தந்த பொருளால் தயாரிக்கப்பட்ட ரசம் நமக்கெல்லாம் மருந்தானது என்றேன் சீரகம் மிளகு பூண்டு தக்காளி மிளகாய் புளி கடுகு
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்

புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்

வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்

மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன்

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

ஐ.சண்முகநாதன் மறைந்தாரே!

முதுபெரும் பத்திரிகையாளர்
70 ஆண்டுகளை
இதழியல்  துறைக்கே
அர்ப்பணித்தவர்

தமிழர் தந்தை
சி.பா.ஆதித்தனாரால்
வார்க்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்

அவர் மறைவு
பத்திரிகைத் துறையின்
கட்டைவிரல் ஒடிந்ததுபோல்
வலிக்கிறது

தினத்தந்திதான் அவருக்குக்
குடியிருந்த கோயில்

ஐ.சண்முகநாதன் மறைந்தாரே! முதுபெரும் பத்திரிகையாளர் 70 ஆண்டுகளை இதழியல்  துறைக்கே அர்ப்பணித்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரால் வார்க்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் அவர் மறைவு பத்திரிகைத் துறையின் கட்டைவிரல் ஒடிந்ததுபோல் வலிக்கிறது தினத்தந்திதான் அவருக்குக் குடியிருந்த கோயில்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

திருச்சிக்குச் சென்றிருந்தேன்

சாரதாஸ் மணவாளன்
திருவுடல்மீது பூக்களை
அழுதுவிட்டு வந்தேன்

அவர் தலைமாட்டில்
அவருக்குப் பிடித்த
திருமுறைகள் ஓதினேன்

ஒரு பெருந்துணை
பிரிந்துவிட்டது
முப்பதாண்டு உரையாடல் முடிந்துவிட்டது

இந்த வெப்ப மாதத்தில்
என் திருச்சி நிழல்
எரிந்துவிட்டது

கண்மூடி

திருச்சிக்குச் சென்றிருந்தேன் சாரதாஸ் மணவாளன் திருவுடல்மீது பூக்களை அழுதுவிட்டு வந்தேன் அவர் தலைமாட்டில் அவருக்குப் பிடித்த திருமுறைகள் ஓதினேன் ஒரு பெருந்துணை பிரிந்துவிட்டது முப்பதாண்டு உரையாடல் முடிந்துவிட்டது இந்த வெப்ப மாதத்தில் என் திருச்சி நிழல் எரிந்துவிட்டது கண்மூடி
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

ஆகோள்
கபிலன் வைரமுத்துவின்
தமிழ்நாவல்
இன்று ஆங்கிலத்தில்

வெள்ளையரின்
குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு
எதிராகப் போராடி
உயிர்நீத்த வீரர்களின் வரலாற்றை
நிகழ்கால அறிவியல் தளத்தில்
நின்று பேசுகிற நவீனப் புனைவு

தமிழ்ப்பெயரே
மொழிபெயர்ப்புக்கும்

வெளியிட்ட ரூபா பதிப்பகம்
மொழிபெயர்த்த

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

உழைப்பு, காதல், பசி
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்

அந்த உழைப்பு
உரிமை பெற்றநாள்
இந்த நாள்

தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துக்குரியவர்கள்

இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

திருச்சி
மலைக்கோட்டை அடிவாரத்தில்
ஒரு துணிக்கோட்டை
கட்டியெழுப்பிய
சாரதாஸ் மணவாளன்
மறைந்தார் என்ற செய்தியில்
கலங்கி நிற்கிறேன்

என்மீது பெருமதிப்பும்
பேரன்பும் கொண்ட
பெருமகன் அவர்

திருமுறைகளின் 
தீராத காதலர்

அள்ளிக் கொடுக்கும்
அறப்பணி வள்ளல்

தன்முகத்தில் 
விளம்பரத்தின் நிழல்கூட

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

கணிசமான கவனம்பெற்ற
FINDER திரைப்படத்தின்
கலைக் குழுவினர்
இயக்குநர்
வினோத் ராஜேந்திரன் தலைமையில்
வீட்டுக்கு வந்து
வாழ்த்துப் பெற்றனர்;
பாட்டு வரிகள்
படத்திற்கு பலம் என்றனர்

வெற்றிகள்
அரிதாகிப்போன சூழலில்
சிறிதாகிய வெற்றியும்
பெரிதாகத் தோற்றுகிறது

ஒவ்வொருவரையும்
வாழ்த்தினேன்

கணிசமான கவனம்பெற்ற FINDER திரைப்படத்தின் கலைக் குழுவினர் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் தலைமையில் வீட்டுக்கு வந்து வாழ்த்துப் பெற்றனர்; பாட்டு வரிகள் படத்திற்கு பலம் என்றனர் வெற்றிகள் அரிதாகிப்போன சூழலில் சிறிதாகிய வெற்றியும் பெரிதாகத் தோற்றுகிறது ஒவ்வொருவரையும் வாழ்த்தினேன்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

பாரதியாரை
தேசியத்தின் குறியீடாகவும்
பாரதிதாசனை
திராவிடத்தின் குறியீடாகவும்
ஆதியில்
அடையாளப்படுத்தியவர்கள்,

காலப்போக்கில்
பாரதியாரை
காங்கிரஸ் குறியீடாகாவும்
பாரதிதாசனை
தி.மு.க குறியீடாகவும்
சுருக்கிவிட்டனர்

காங்கிரசும் தி.மு.கவும்
கூட்டணி கொண்டாடும்
இந்தக் காலகட்டத்திலாவது

பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர் காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

முதலமைச்சரை நேற்று
முகாம் அலுவலகத்தில்
சந்தித்தேன்

குறித்த நேரம் காலை 10.15
நான் அடைந்த நேரம் 10.14
முதலமைச்சர்
வந்து வரவேற்ற நேரம் 10.15

நேர மேலாண்மையில்
சர்வதேச ஒழுங்கைக்
கடைப்பிடிக்கிறார்

40 ஆண்டுகளாய்ப்
பார்த்தும் பழகியும் வருகிறேன்

பருவம் கூடக் கூடப்
பக்குவம்

முதலமைச்சரை நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன் குறித்த நேரம் காலை 10.15 நான் அடைந்த நேரம் 10.14 முதலமைச்சர் வந்து வரவேற்ற நேரம் 10.15 நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன் பருவம் கூடக் கூடப் பக்குவம்
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன

20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது

30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது

account_circle